Thursday, July 16, 2009

# பூ


நீ .

Sunday, July 5, 2009

# ஆஹா



ஒவ்வொரு
குழந்தையின்
முகத்தையும்

ஒவ்வொரு
முறை
பார்க்கும்போதும்
ஏற்படுகிறது....

ஒரு
நல்ல கவிதையை
எழுதி முடித்த
மகிழ்ச்சி!

Friday, July 3, 2009

#அப்படியானால்



உங்களைப்
பார்த்து

பல பேர்
பொறாமைப்
படுகிறார்களா?

அப்படியானால்
நீங்கள்
பெரிய ஆள்.

ஆனால்

நீங்கள்
யாரைப்
பார்த்தும்
பொறாமைப்
படவில்லையா?

அப்படியானால்

நீங்கள்
ரொம்பப்
பெரிய ஆள்.

Thursday, July 2, 2009

# கனம்



மௌனமும் உறங்கும்
பின் நள்ளிரவில்....


குழந்தைகளை விடவும்
குழந்தைகளைப் போல்

குழந்தைகளை விடவும்
குழந்தைத்தனமாக

குழந்தைகளை விடவும்
குழந்தைக் குரலில்

குழந்தைகளை விடவும்
குழந்தைகள் பாணியில்

குழந்தைகளை விடவும்
குழந்தைகள் மழலையில்

குழந்தைகளை விடவும்
குழந்தைகளின் தவிப்பில்

குழந்தைகளை விடவும்
குழந்தைகளாக‌

'ங்கா' விடும்
குட்டிப் பூனைகளின்
குரல்கள் கேட்கும்போதெல்லாம்

தவறாமல்
ஞாபகம் வருகிறது ,

சிறுவயதில்
பார்த்ததொரு
சின்னக் குழந்தையின்
மரணம் .

இன்னும்
இருள்கிறது,
இருட்டு.

Wednesday, July 1, 2009

# புரிஞ்சு போச் !


மனசின் விசாலம்....
அதுவே
வாழ்வின் விலாசம்!

# பூவும் பெண்ணும்




பூ

விற்கும்
பெண்கள் யாரும்
அழகாகத் தெரிவதில்லை.



காரணம் ....
பூக்களை விட
எந்தப் பெண்ணும்
அழகில்லை.!

Saturday, June 27, 2009

* உண‌ர்ந்த‌றித‌ல்














வெருண்டு
உருண்டு
கண்கள் மருண்டு

காற்றும் நீருமாய்
நாசி நடுந‌டுங்க‌..

காது விரைக்கக்
கழுத்து அதிர்ந்து ...

கால்கள் துவண்டு
கன்னங்க‌ள் கிட்டித்து...

உடம்பு கிடுகிடுக்க
உள்ளுக்குள் வெடிவெடிக்க...

பெருமுச்சுக் குவிய‌லில்
உயிர்மூச்சுக் க‌ல‌க‌ல‌த்து..

இதுவ‌ரை கேட்ட‌றியா
வித‌ங்க‌ளில் க‌த‌ற‌லிட்டு ....

முன்னுடம்பு குறுக்கி
பின்னுட‌ம்பு பிதுக்கி....

பூமிப்ப‌ந்தை ஒரு நிமிட‌ம்
புதிதாக‌ப் பிற‌க்க‌விட்டு...

க‌ன்றீன்று நாக்கிட்ட‌
கார‌ம்ப‌சு பார்த்து

உட‌லெல்லாம் சிலிர்ப்போடி
உள்ள‌ம் க‌ளைத்து நின்றான்.....

வீட்டில் .....

‌ர்ப்பிணியாய்....

‌னைவி!





Thursday, June 25, 2009

* துடிக்கும் இதயம்


தலைச்
சிவப்பு
விளக்கு
தறிகெட்டுச்
சுழல,

நீண்ட
அலறலோடு
ஓடி வந்து ...

போக்குவரத்து
நெரிசலெனும்
பொறியில்
வசமாய்ச் சிக்கி...

முட்டி மோதி
திக்கித் திணறி ...


விட்டு விட்டு
வீறிட்டுக் கத்தும்

ஒவ்வொரு
அவசர சிகிச்சை
மருத்துவ ஊர்தியைப்
பார்க்கும்போதும்...


என் இதயம்
வேகமாய்த் துடிக்கிறது.....

'உள்ளே
எந்த இதயம்
தட்டுத் தடுமாறித்
துடித்துக் கொண்டிருக்கிறதோ.......................?'