Saturday, June 27, 2009

* உண‌ர்ந்த‌றித‌ல்














வெருண்டு
உருண்டு
கண்கள் மருண்டு

காற்றும் நீருமாய்
நாசி நடுந‌டுங்க‌..

காது விரைக்கக்
கழுத்து அதிர்ந்து ...

கால்கள் துவண்டு
கன்னங்க‌ள் கிட்டித்து...

உடம்பு கிடுகிடுக்க
உள்ளுக்குள் வெடிவெடிக்க...

பெருமுச்சுக் குவிய‌லில்
உயிர்மூச்சுக் க‌ல‌க‌ல‌த்து..

இதுவ‌ரை கேட்ட‌றியா
வித‌ங்க‌ளில் க‌த‌ற‌லிட்டு ....

முன்னுடம்பு குறுக்கி
பின்னுட‌ம்பு பிதுக்கி....

பூமிப்ப‌ந்தை ஒரு நிமிட‌ம்
புதிதாக‌ப் பிற‌க்க‌விட்டு...

க‌ன்றீன்று நாக்கிட்ட‌
கார‌ம்ப‌சு பார்த்து

உட‌லெல்லாம் சிலிர்ப்போடி
உள்ள‌ம் க‌ளைத்து நின்றான்.....

வீட்டில் .....

‌ர்ப்பிணியாய்....

‌னைவி!





4 comments:

கலையரசன் said...

அருமையான கவிதை நடை!
தொடருங்கள்..

கலையரசன் said...

settings -> comments--> word verification க்கு no குடுங்க... ஒவ்வொரு முர கமெண்ட் குடுக்குறப்பயும் டார்ச்சர் பண்ணுது :-)

சு.செந்தில் குமரன் said...

நன்றி கலையரசன். உடனே செய்து விட்டேன். மற்ற கவிதைகளையும் படித்து உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்

Vincent said...

உணர்ந்தறிதல். மிக மிக அருமை. ஆனால் மற்றவை எல்லாம் உரைநடை போல தோன்றுகிறது.

Post a Comment