



வெருண்டு உருண்டு
கண்கள் மருண்டு
காற்றும் நீருமாய்
நாசி நடுநடுங்க..
காது விரைக்கக்
கழுத்து அதிர்ந்து ...
கால்கள் துவண்டு
கன்னங்கள் கிட்டித்து...
உடம்பு கிடுகிடுக்க
உள்ளுக்குள் வெடிவெடிக்க...
பெருமுச்சுக் குவியலில்
உயிர்மூச்சுக் கலகலத்து..
இதுவரை கேட்டறியா
விதங்களில் கதறலிட்டு ....
முன்னுடம்பு குறுக்கி
பின்னுடம்பு பிதுக்கி....
பூமிப்பந்தை ஒரு நிமிடம்
புதிதாகப் பிறக்கவிட்டு...
கன்றீன்று நாக்கிட்ட
காரம்பசு பார்த்து
உடலெல்லாம் சிலிர்ப்போடி
உள்ளம் களைத்து நின்றான்.....
வீட்டில் .....
கர்ப்பிணியாய்....
மனைவி!